கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே – 3 இந்திய வீரர்களுக்கு இடம்

Bhogle
- Advertisement -

ஐசிசி அறிவித்த கடந்த தசாப்தத்தின் (2011 – 2020) அணியில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா,எம்எஸ் தோனி, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளது இந்திய அணிக்கு கிடைத்த பெருமையாகக் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறந்த ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை தேர்வு செய்து அறிவித்திருந்தது. அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, எம்எஸ் தோனி, பும்ரா, அஸ்வின் ஆகிய இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.

Rohith

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த தசாப்தத்தின் ஐசிசி அணியில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனி கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இதோடு சேர்த்து ஐசிசி கடந்த தசாப்தத்திற்கான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில் டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அதிரடி வீரர் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியும், டி20 கிரிக்கெட்டில் ரசித் கானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம் எஸ் தோனிக்கு “ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்” என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐசிசியை தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த அணியை தேர்வு செய்து வருகிறார்கள்.

Rohith

ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள அணியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் தோனி ஆகிய மூவர் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் விராட் கோலியை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், எம்எஸ் தோனி விக்கெட் கீப்பராகவும் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ளார். மேலும் டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ்,ஷாகிப் அல் ஹசன், ரசீத் கான், மிட்செல் ஸ்டார்க், லசீத் மலிங்கா, டிரண்ட் பவுல்ட்ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள சிறந்த அணி :

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், தோனி, ஷாகிப் அல் ஹசன், ரசீத் கான், மிட்செல் ஸ்டார்க், லசீத் மலிங்கா, டிரண்ட் போல்ட்

Advertisement