ஹர்ஷா போக்லே தேர்வு செய்த இந்தாண்டின் சிறந்த ஐ.பி.எல் லெவன் அணி – லிஸ்ட் இதோ

Bhogle

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று பல சாதனைகள் படைத்துவிட்டது. இது அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பை ஆகும். ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் இந்த வருட ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து வெளியிடுவார்கள்.

mi

எனவே பல்வேறு தரப்பினரும் இதனை வெளியிட்டு வரும் நிலையில் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது சிறந்த அணியை வெளியிட்டிருக்கிறார். இந்த அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கின்றன நட்சத்திர வீரர்கள் யாருக்கும் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவும் இந்த அணியில் இடம்பெறவில்லை. இந்த அணியின் தொடக்க வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர்தான் இந்த வருடத்தில் அதிக ரன் குவித்த வீரராவார்.மற்றொரு வீரராக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இந்த வருடத்தில் இரண்டு சதங்கள் அடித்த வீரர் இவர். அதனை அடுத்து மூன்றாவது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ், நான்காவது இடத்திற்கு பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், விக்கெட் கீப்பராக இவர்தான் செயல்படப்போகிறார்.

sky

ஐந்தாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆறாவது இடத்திற்கு ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக சோப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

- Advertisement -

சுழற்பந்து வீச்சாளராக ரஷீத் கான் மற்றும் சகால் ஆகியோர் அணியில் இருக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, மகேந்திரசிங் தோனி, ரோகித் சர்மா ஆகியோர் இவரது அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Archer 1

ஹர்ஷா போக்லே தேர்வு செய்த அணி இதோ :

கே.எல் ராகுல், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ஏ.பி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரசீத் கான், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.