போட்டியின் போதே நேரடியாக முறைத்துக்கொண்ட நவ்தீப் சைனி மற்றும் ஸ்டார்க் – நடந்தது என்ன ?

starc
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வந்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் இழந்து 338 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களை எடுத்தனர்.

Jadeja-2

இதில் ஜடேஜா, சிராஜ், பும்ரா,சைனி சிறப்பாக விளையாடி அணிக்கு விக்கெட்களை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில், உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக இளம் வீரர் நவ்தீப் சைனி அணியில் இடம்பெற்றார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நவதீப் சைனி பலரால் பாராட்டப்பட்டார். முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி எதற்காக பாராட்டு பெற்றாலும் இவரது பந்து வீச்சுக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

நவதீப் சைனி கிட்டத்தட்ட 8 பவுன்சர்கள் வீசி இருக்கிறார். பவுன்சர்களை முயற்சித்து நோபால்களையும் வீசுகிறார். அணியில் இருக்கும் அனைவரும் சைனிக்கு அறிவுரை கூறியும் சைனி தனது பந்துவீச்சை மாற்றவில்லை. சைனி 13 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

Saini 1

இந்நிலையில், நவதீப் சைனி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்-கு பந்து வீசிய போது இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. சைனி ஸ்டார்க்-கு தொடர்ச்சியாக பவுன்சர்களை மட்டுமே வீசியதால் ஸ்டார்க் ஒரு கட்டத்தில் கோபமடைந்தார்.இதில் ஒரு பந்தை ஃபுல் டாஸாக வீசினார் சைனி. தலையை நோக்கி வேகமாக போட்டதால் ஸ்டார்க் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

saini 1

இதனால் மிகவும் கோபமடைந்த ஸ்டார்க் முறைத்தவாறு சைனியை பார்த்தார். சைனி அப்போது ஸ்டார்கிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் ஸ்டார்க்-ன் கோவம் குறையவில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஸ்டார்க் சைனியின் அதே ஓவரில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். ஆனல் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த ஸ்டார்க் தனது விக்கெட்டை இழந்து அதே கோபத்துடன் பெவிலியன் திரும்பினார்.

Advertisement