இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது மார்ச் 5-ஆம் தேதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மார்க் 8-ம் தேதி மோதும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இந்திய அணியை வீழ்த்தும் திட்டம் ரெடி : ஹாரி புரூக்
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் இந்த அரையிறுதி போட்டிக்கு முன்னதாக தங்களது வியூகங்கள் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் முக்கிய தகவல்கள் சிலவற்றை முன்வைத்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எங்களிடம் இந்திய அணியின் வீரர்கள் குறித்த நிறைய தரவுகள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.
இந்தியா பேட்ஸ்மேன்கள் எந்த பகுதியில் அதிகமாக ரன் சேர்க்க முயற்சிப்பார்கள்? எந்த பலருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடுவார்கள்? என்பதை முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். அதேபோன்று போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மன்களுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தையும் வகுத்துள்ளோம்.
ஏற்கனவே இந்திய அணியின் அனைத்து வீரர்களின் வீடியோவும் எங்களிடம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக வெவ்வேறு பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து எவ்வாறு கட்டுப்படுத்துவோம்? என்கிற முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் காரணமாக சரியான திட்டத்துடன் இந்திய அணிக்கு இன்று கடுமையான போட்டியை கொடுக்க முயற்சிப்போம். அதன்மூலம் நிச்சயம் எங்களுக்கு வெற்றியும் கிடைக்கும் என ஹாரி புரூக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அந்த இந்திய வீரர் ரொம்ப ஆபத்தானவர்.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க – எச்சரித்த ஸ்டூவர்ட் பிராடு
ஏற்கனவே இங்கிலாந்து அணி தாங்கள் விளையாடிய கடைசி மூன்று போட்டியிலும் இலங்கை நாட்டில் விளையாடியுள்ளதால் வான்கடே மைதானத்தில் மீண்டும் அந்த சூழலை கணித்து வருவதற்கு சற்று நேரம் பிடிக்கும் என்று பலரும் பேசி வரும் வேளையில் இந்திய அணியை வீழ்த்தும் என சவால் விடுக்கும் வகையில் ஹாரி புரூக் பேசியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



