இனிமேல் நல்லவங்களா இல்லாம.. இந்தியாவை திருப்பி அடிக்கனும்ன்னு அவர் தான் மீட்டிங்ல சொன்னாரு.. ப்ரூக் பேட்டி

Harry Brook
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணியிடம் இங்கிலாந்து அவமானத் தோல்வியை சந்தித்தது.

அந்த படுதோல்வியாலும் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் திரும்பிய காரணத்தாலும் 3வது போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து முன்னிலைப் பெற்றது. முன்னதாக அப்போட்டியில் 3வது நாளின் முடிவில் இங்கிலாந்து 2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

- Advertisement -

நல்லவங்களா இருக்கக்கூடாது:

அப்போது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதைப் பார்த்து கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் சில மோசமான வார்த்தைகளை சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதுவே தங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்து இந்தியாவை தோற்கடிக்க உதவியதாக போட்டியின் முடிவில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த தருணத்தில் தான் “இனிமேலும் நாம் நல்லவர்களாக இருக்காமல் இந்தியாவுக்கு திரும்பி பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து வீரர்களிடம் மீட்டிங்கில் சொன்னதாக ஹாரி ப்ரூக் கூறியுள்ளார். இது பற்றி ப்ரூக் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அன்றைய நாளுக்கு 2 நாட்கள் முன்பாகத் தான் சில சமயங்களில் நாம் மிகவும் நல்லவர்களாக இருப்பதாக மெக்கல்லம் எங்களிடம் சொன்னார்”

- Advertisement -

கெட்டவனாக மாறிய இங்கிலாந்து:

“அதனால் 3வது நாள் முடிவில் நான் அதை எடுத்து வந்தேன். அப்போது மெக்கல்லம் “நேற்று நாம் மிகவும் நல்லவர்களாக இருந்தோம், ஆனால் நாளை இந்தியாவுக்கு திருப்பி பதிலடி கொடுக்க சரியான வாய்ப்பு என்று நினைக்கிறேன்” என சொன்னார். அவருடைய வார்த்தைகள் சரியான நேரத்தில் வந்தது. முந்தைய நாளில் இந்தியர்கள் செய்த காரியத்தால் அடுத்த நாள் நாங்கள் நல்லவர்களாக இருக்க வாய்ப்பில்லை”

இதையும் படிங்க: என் மகள் உட்பட இப்போதைய இந்தியர்களின் ஆயுள் குறைய இதான் காரணம்.. எல்லாரும் அதை செய்ங்க.. தோனி அறிவுரை

“குறிப்பாக மொத்த இந்திய அணியினரும் எங்களுடைய 2 வீரர்கள் மேலே மோதச் சென்றதைப் பார்த்தோம். அப்போது நாங்கள் இதற்காக நிற்கவில்லை என்று நினைத்தோம். அன்றைய நாளில் நாங்கள் உரையாடினோம். அப்போது இனிமேல் இதற்கு முன்பிருந்ததைப் போல நாம் நல்லவர்களாக இருக்கக்கூடாது என்று பேசி முடிவெடுத்தோம்” எனக் கூறினார்.

Advertisement