இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதற்கு முந்தைய போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி மனதளவில் பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது என்றே சொல்லலாம்.
அதையும் தாண்டி 3வது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் தொடரை முன்னிலை பெற்றது. இந்நிலையில் அந்த எழுச்சிக்கு 3வது நாள் மாலை வேளையில் இந்திய அணியினர் தங்களுடைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வம்பிழுத்ததே காரணம் என்று இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். அதாவது 3வது நாள் மாலை வேளையில் இங்கிலாந்து 2 ஓவர் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஜஸ்ப்ரித் பும்ரா ஓவர்:
அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவருக்கு எதிராக இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அப்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் அவரிடம் மோசமான வார்த்தைகளை சொல்லி வாக்குவாதம் செய்தார். இந்திய அணியினரும் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை சூழ்ந்து பதிலடி கொடுத்தார்கள்.
அந்த தருணத்தைப் பார்த்த போது தான் இந்தியாவுக்கு திருப்பி சென்று பதிலடி கொடுக்க வேண்டுமென்று இங்கிலாந்து அணி பேசி முடிவெடுத்ததாக ப்ரூக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பென் டக்கெட், ஜாக் கிராவ்லியிடம் இந்திய அணியினர் சென்றதை நாங்கள் பார்த்தோம். எனவே நாங்கள் சிறிய பேச்சுவார்த்தை நடத்தினோம்”
இந்தியா திருப்பி கொடுக்குமா:
“நாம் அணியாக ஒருவருக்கொருவர் ஒன்று சேர்ந்து இந்திய அணி மீது மீண்டும் செல்வோம் என்று முடிவெடுத்தோம். அதே சமயம் முடிந்தளவுக்கு நாங்கள் கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மைக்கு உட்பட்டு விளையாட முயற்சி செய்தோம். பும்ரா வீசிய அந்த ஒற்றை ஓவரில் இந்திய வீரர்கள் கிராவ்லி, டக்கெட் ஆகியோர் மீது மிகவும் கடினமாக சென்றார்கள். அதைப் பார்த்த நாங்கள் இதுவே இந்தியாவுக்கு திருப்பி பதிலடி கொடுப்பதற்கான சரியான நேரம் என்று உறுதி செய்தோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2 – 1ன்னு இந்தியா பின்தங்க.. விராட் கோலியை ஐபிஎல்’லயே காப்பி அடிச்ச கில் தான் காரணம்.. மனோஜ் திவாரி
இதைத் தொடர்ந்து 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது. கடந்தப் போட்டியில் சந்தித்த தோல்விக்கு அங்கே இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய தயாராகி வருகிறது. அத்துடன் மான்செஸ்டரில் முதல் முறையாக வெற்றி பெறுவதற்கு இந்தியா முழுமூச்சுடன் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



