மியா கலிஃபாவிற்கு வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் வீரர். என்ன சொல்லியிருக்காரு தெரியுமா ? – இவரா இப்படி ?

Brar
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வந்த 14-வது ஐபிஎல் தொடர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு இடையே பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக இந்த தொடரானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

hetmyer

- Advertisement -

இந்நிலையில் அடுத்தடுத்து சிஎஸ்கே, டெல்லி, சன்ரைசர்ஸ் என மற்ற அணி வீரர்களுக்கும் பரவியதால் இந்த தொடரானது நடத்தப்படாமல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஏராளமான இளம் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றனர். அந்த வகையில் இந்த வருடம் ரசிகர் மத்தியில் பெயரை சம்பாதித்த வீரர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹர்ப்ரீட் பிராரும் ஒருவர்.

இந்நிலையில் இவர் முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிபாவிற்கு வாழ்த்து கூறிய ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீட் பிரார் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 25 ரன்கள் விளாசியது மட்டுமின்றி பவுலிங்கில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோரது ஜாம்பவான் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

Harpreet

அதன்மூலம் ஒரே இரவில் ஹீரோவான ஹர்ப்ரீட் பிரார் இந்த ஐபிஎல் தொடரில் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக மாறினார். இந்நிலையில் தற்போது அவர் ஆபாச பட நடிகையான மியா கலிபா பின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய உள்ள ஒரு ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி 28 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மியாகலிபாவிற்கு மூன்று நாட்கள் கழித்து “Belated Happy Birthday” என்று அவர் செய்த இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆபாச நடிகையான மியா கலிபாவிற்கு இவர் வாழ்த்து கூறியதால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என இவரை இணையத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement