சென்னைக்கு ஒரு ஜடேஜா போல. பஞ்சாபுக்கு கிடைத்த மேட்ச் வின்னர் – யார் அது ? எப்படி என்ன செய்தார் தெரியுமா ?

harpreet 2

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

rahul

அதன்படி பஞ்சாப் அணி தற்போது முதல் இன்னிங்சை விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அவர்கள் 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று அதிரடியாக விளையாடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் அடித்து மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஆக இன்று விளையாடிய ஹர்ப்ரீட் பிரார் இருந்தார்.

harpreet 1

இந்த பேட்டியின்போது 17வது ஓவர் வரை 140 ரன்களுக்குள் இருந்த பஞ்சாப் அணி இறுதியில் 179 வரை வருவதற்கு இவர் முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் 17 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 25 ரன்கள் அடித்து ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேவேளையில் ராகுல் அதிரடியாக விளையாட ஸ்கோர் 179 வந்தது. இது பெங்களூர் அணிக்கு ஒரு பாதகமாக அமைந்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்திய ஹர்ப்ரீட் பிரார் ஒரே ஓவரில் விராட் கோலி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரை கிளீன் போல்ட் செய்தார். அதுமட்டுமின்றி அடுத்ததாக மற்றொரு ஓவரில் ஏபி டிவிலியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஆர்.சி.பி அணியின் மூன்று முக்கிய வீரர்களையும் அவுட் ஆக்கினார். இந்த போட்டியில் 4 ஓவர் வீசி 1 மெய்டன் மற்றும் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

harpreet 3

பேட்டிங்கில் தேவையான நேரத்தில் அதிரடியாக 25 ரன்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அவர் பீல்டிங்கிம் சிறப்பாக செயல்பட்டார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோன்று ஜடேஜா மூன்று துறைகளிலும் அசத்திய வேளையில் தற்போது பஞ்சாப் அணிக்காக அசத்தி உள்ள இவர் நிச்சயம் மேட்ச் வின்னர் ஆக பஞ்சாப் அணிக்கு திகழ்வார் என்று கூறலாம்.