பெங்களூரு அணியின் முதுகெலும்பை உடைத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த இளம்வீரர் – விவரம் இதோ

Harpreet
- Advertisement -

நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 26வது லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூர் அணியால் 20 ஓவர் முடிவில் 145 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

gayle

- Advertisement -

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அந்த அணியின் இளம் வீரரான ஹர்ப்ரீத் ப்ரார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அப்போது அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இளம் வீரரான ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்னிங்ஸ் முடிவில் அவர் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறினார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தவித்த வந்த பஞ்சாப் அணியை தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் கரைசேர்த்தார் இளம் வீரரான ஹர்ப்ரீத் ப்ரார்.

brar 1

ஆனால் அவருடைய பணி இன்னும் முடியவில்லை என்பதை அவர் அப்போது நன்றாகவே உணர்ந்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பஞ்சாப் அணி வீரர்கள் எடுத்திருந்தாலும், கேப்டன் விராட் கோலி மற்றும் ராஜத் படிதார் தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய ஹர்ப்ரீத் ப்ரார், அந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி, அடுத்த பந்தில் கிளென் மேக்ஸ்வெல் என தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை மட்டும் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஓவரையும் மெய்டனாக வீசினார்.

- Advertisement -

அப்போது பெங்களூர் அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே. ஆனால் அவரையும் 13வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்து பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஹர்ப்ரீத் ப்ரார். இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வலுவான அணியாக பார்க்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தனது பேட்டிங் மற்றும் பௌலிங் திறமையால் திணறடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்த ஹர்ப்ரீத் ப்ரார் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, பெங்களூர் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement