தல தோனியின் ரெக்கார்டையே காலி பண்ணிய ஹர்மன் ப்ரீத் கவுர் – அப்படி என்ன சாதனை தெரியுமா?

Harman-and-Dhoni
- Advertisement -

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியானது தற்போது இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ரன்களை குவித்தது.

அடுத்ததாக விளையாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 159 ரன்களை மட்டுமே குவித்ததால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்து இருந்தது. இருப்பினும் இந்த போட்டியில் கேப்டனாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று அவர் பங்கேற்ற இந்த போட்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக பங்கேற்ற 101-வது போட்டியாக அமைந்தது. இதன் மூலம் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் படைக்காத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு வகையான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவருக்கு முன்னதாக ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேக் லானிங் 100 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதிக டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் 101 டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடி முதலிடைத்த பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : சச்சினின் அந்த ஒரு சாதனையை மட்டும் விராட் கோலியால் உடைக்க முடியாது.. லாரா கருத்து

ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் 76 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து தோனி 72 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இப்படி தோனியின் சாதனையையும் தாண்டியதோடு ஒட்டுமொத்தமாக அதிக டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement