MS Dhoni : தோனியின் செயலை கடுமையாக விமர்சித்து காட்டமாக பேசியுள்ள நடுவர்

Dhoni
- Advertisement -

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியானது தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 6 பந்துகளில் 18 ரன்கல் அடிக்கவேண்டும் என்ற நிலையில் சென்னை அணி இருந்தபோது கடைசி ஒவேரில் வீசப்பட்ட பந்து ஒன்றை நோ பால் என ஒரு அம்பையர் அறிவித்தார். ஆனால் சில நொடிகளிலேயே அது நோ பால் இல்லை என்று மற்றொரு அம்பையரால் அறிவிக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

இறுதி ஓவர் என்பதால் அனைவரிடமும் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், நோ பால் சர்ச்சை குறித்து கேட்டறிவதற்காக தோனி நேரடியாக களத்திற்கு உள்ளே சென்று அது குறித்து அம்பையரிடம் கேள்வி எழுப்பினார். ஆனலும் அந்த பந்து நோ பால் இல்லை என்றே அறிவிக்கப்பட்டது.

தோனியின் இச்செயல் குறித்து உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதோடு தோனியின் இந்த செயல் தவறானது என்று கூறி அவருக்கு 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhoni-2

 

- Advertisement -

இந்த நிலையில் தோனியின் செயல் குறித்து முன்னாள் நடுவர் ஹரிஹரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

Dhoni

உலக அளவில் புகழ்பெற்ற தோனி போன்ற முன்னணி வீரர்கள் அம்பையர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் நடந்துகொள்கின்றனர். கிரிக்கெட் விதியின் படி அந்த பந்திற்கு லெக் அம்பையர் தான் நோ பால் வழங்க வேண்டும் ஆனால் காந்தே அதற்கு நோ பால் வழங்கினார். எப்படியாயினும் அது அம்பையரின் முடிவுதான். அதற்காக தோனி மைதானத்திற்குள் வந்து அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சரி அல்ல.

Dhoni

இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், அச்சமயத்தில் நடுவரோடு தோனி விவாதத்தில் ஈடுபட அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. அப்படி இருக்கையில் இது போன்று அவர் நடந்துகொண்டது அவர் செய்த பெரும் தவறு. அந்த தவறுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மிக குறைவு என்றே நான் கருதுகிறேன் என்று ஹரிஹரன் கூறியுள்ளார்.

Advertisement