இஷான் கிஷனிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா – காரணம் இதுதான் ?

kishan
- Advertisement -

மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையிலான முக்கியமான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த பாண்டியா விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை நோக்கி வேகமாக பந்தை எறிந்தார்.மும்பை அணி 13 வது ஓவரை வீசியபோது பீல்டிங் செய்துகொண்டிருந்த ஹர்திக் பாண்டியா பீல்டிங்கில் பந்தை பிடித்து வேகமாக கீப்பரை நோக்கி எறிந்தார்.
pandiya1

வேகமாக இஷான்கிஷனை நோக்கி வந்த பந்து எதிர்பாராத விதமாக அவரது முகத்தை பதம்பார்த்தது. எதிர்பாரா விதமாக பந்து தரையில் பட்டு மேலே எழும்பி மும்பை அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் முகத்தில் பட்டு இஷான் கீழே விழுந்து துடி துடிக்க ஆரம்பித்தார். வேகமாக பந்து பட்டதில் இஷான்கிஷனின் கண்களுக்கு கீழே பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது. இஷான்கிஷனின் முகத்தில் பந்து பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் நிலைகுலைந்து போனார். இதனால் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.இந்த மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. தற்போது காயத்தில் அவதிப்பட்டு வரும் இஷான்கிஷன் அடுத்த போட்டிக்குள் குணமாகி விடுவார் என்றும், கண்டிப்பாக அடுத்தபோட்டியில் அவர் விளையாடிடுவார் என்றும் மும்பை அணி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் ஹர்திக்பாண்டியா வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த டிவீட்டில் ”தம்பி, என்னை மன்னித்து விடு” என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது மைதானத்தில் ஹர்திக் பாண்டியாதான் இஷான் துடித்ததை விட அதிகமாக துடித்தார். பந்து அடிபட்ட வேகத்தில் இஷான் கிஷன் அருகில் ஓடிப்போய் எப்படி இருக்கிறார் என்று பார்த்தார்.

Advertisement