முதன்முறையாக ஹிட் விக்கெட் ஆகி அதிர்ச்சியுடன் வெளியேறிய ஹார்டிக் பாண்டியா

pandya
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது…

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 33 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் ஆட்டநாயகனாக 80 ரன் அடித்த ரோகித் சர்மா தேர்வானார். இந்தப் போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த பொது 13 பந்துகளை சந்தித்த பாண்டியா 2 பவுண்டரி ஒரு சிக்சர் என 18 ரன்களை குவித்து விட்டு வித்தியாசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

அதாவது அணியின் ஸ்கோர் 180 இருந்தபோது 19 ஆவது ஓவரை ரசல் வீசினார். அவர் வீசிய அந்தஜா பந்தை உள்ளே சென்று விளையாட வேண்டும் என்று ஸ்டம்ப் பக்கம் நகர்ந்து பேட்டை சுழற்ற முயற்சித்தபோது பேட் தெரியாமல் ஸ்டம்பின் மீது பட்டது. இதனால் முதல் முறையாக ஹிட் விக்கெட் ஆகி பாண்டியா அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

டெத் ஓவர்களில் எப்போதும் நின்ற இடத்தில் இருந்து பெரிய சிக்ஸரை அடிக்கும் பாண்டியா இம்முறையும் பெரிய ஷாட்டை ஆட முயற்சித்து பின்சென்று ஆடியதால் இந்த விக்கெட் ஏற்பட்டது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement