இதெல்லாம் போதாது.. இந்தியாவுக்காக 5 – 6 கோப்பை ஜெயிக்கணும்.. அதான் என் அடுத்த டார்கெட்.. பாண்டியா பேட்டி

Hardik Pandya
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் துபாயில் தங்களது போட்டிகளை விளையாடியது இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை முத்தமிட்டது. மேலும் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்தியா உலக சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியாவுக்காக குறைந்தது 5 – 6 ஐசிசி கோப்பைகளை வென்று தமது கேரியரின் அலமாரியில் அடுக்க விரும்புவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்றாலும் அவையெல்லாம் தமக்குப் போதாது என்று அவர் கூறியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் போராடியும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போதைய வெற்றி மகிழ்ச்சியை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

5 – 6 கோப்பைகள் வேணும்:

இது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு. “2017இல் வேலை குறையாக விடப்பட்டது. அன்றைய நாளில் என்னால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய நாள் இரவு சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியாளர் என்ற பெயருடன் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை எப்போதும் என்னால் முடிந்தளவுக்கு நிறைய சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும்”

“2024 டி20 உலகக் கோப்பையை வென்ற போது இத்தோடு முடியவில்லை இன்னும் 5 – 6 கோப்பைகள் எனக்கு வேண்டும் என்று சொன்னேன். அப்படி சொன்னதிலிருந்து மற்றுமொரு கோப்பையை தற்போது சேர்த்துள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் விளையாடும் என்னுடைய பயணத்தில் எனது அணி வெற்றி பெறுகிறதா? என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமான விஷயம்”

- Advertisement -

அடுத்த டார்கெட்:

“இந்தியாவுக்காக அனைவரும் வரும் இடத்தில் கிடைக்கும் இது போன்ற வெற்றியை நான் விரும்புகிறேன். தற்போது சாம்பியன்ஸ் கோப்பை முடிந்து விட்டது. அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை தூக்குவதே என்னுடைய அடுத்த இலக்கு” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு பாண்டியா ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: 74 சதவீதம்.. ஃபைனலில் 76.. வேற எந்த கேப்டனும் இதை செய்யல.. ரோஹித் ஏன் ரிட்டையராகனும்? ஏபிடி பாராட்டு

அதே போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதற்கும் பாண்டியா முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக சொந்த ஊரில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ளது. அதில் இந்தியா கோப்பையை வெல்வதற்கும் பாண்டியா சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகிறது.

Advertisement