INDvsNZ : நாளைய போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? – ஹார்டிக் பாண்டியா அளித்த பதில்

Pandya-and-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் காரணமாக இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

INDvsNZ

இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை நேப்பியர் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் முன்னணி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் சஞ்சு சாம்சனை தாண்டி தீபக் ஹுடாவை சேர்த்தது ஏன்? என்றும் அதிரடியாக விளையாடக்கூடிய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு தொடர்ச்சியாக சொதுப்பி வரும் ரிஷப் பண்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

Sanju Samson

இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மூன்றாவது போட்டியில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அடுத்த போட்டியில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என்பது குறித்து எனக்கு இப்போதைக்கு எந்தவித யோசனையும் கிடையாது. அணியில் உள்ள அனைவருக்குமே வாய்ப்பு கொடுக்கவே நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது ஒரு போட்டி தான் முடிந்துள்ளது எனவே அணியில் மாற்றம் எவ்வாறு நடைபெறும் என்பதை என்னால் இப்போது சரியாக கூற முடியாது. இது கடினமான ஒன்றுதான் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : 3வது போட்டியில் வருண பகவான் வைத்துள்ள திட்டம் என்ன? மெக்லீன் பார்க் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணியே மூன்றாவது போட்டியில் விளையாடும் என்றும் மூன்றாவது போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement