டி20 வேர்ல்டுகப் இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லாமல் வேறுநாட்டுக்கு பறந்த ஹார்டிக் பாண்டியா – பின்னணி என்ன?

Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொல்கத்தா அணி அசத்தியுள்ள வேளையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மும்பை அணியின் மீது தான் அதிக அளவு விமர்சனங்கள் இருந்து வந்தன.

ஏனெனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த அணியின் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள் நேரடியாக ஹார்டிக் பாண்டியாவை விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

அதன் தொடர்ச்சியாக மும்பை அணியும் இந்த தொடரில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடிக்க ஹார்டிக் பாண்டியாவின் மீதான விமர்சனங்களும் கடுமையாக மாறியது. இது ஒருபக்கம் இருக்க டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதோடு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் நிச்சயம் இந்திய அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பதாகவும் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாண்டியா மற்றும் அவரது மனைவி நட்டாஷா ஆகியோர் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாகவும் கூடிய விரைவில் அவர்கள் விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

ஆனால் இது குறித்து அவர்கள் இருவருமே எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இப்படி பாண்டியாவின் தனிப்பட்ட நிலைமை குழப்பமாக இருந்து வரும் வேளையில் டி20 தொடருக்கான இந்திய அணி அமெரிக்கா சென்றடைந்துள்ள வேளையில் அந்த அணியுடன் பாண்டியா பயணிக்கவில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெளிநாட்டில் அவர் தற்போது ஓய்வினை கழித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அந்த 2 முன்னாள் வீரர்களுக்கு நன்றி.. விராட் கோலி எரிமலையை தட்டி எழுப்பிட்டாங்க.. டிகே அதிரடி பேட்டி

இதற்கு காரணம் யாதெனில் ஐபிஎல் தோல்வி ஒருபுறம், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு ஒருபுறம் என மன அழுத்தத்தில் இருக்கும் அவர் அங்கிருந்து மனரீதியாக ஆறுதல் பெற்ற பின்னரே சரியான நேரத்தில் அமெரிக்கா சென்றடைந்து இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement