நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்டியா – காரணம் என்ன தெரியுமா !

pandiya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் ஹர்திக் பாண்டியா.மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக்பாண்டியா பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி எந்தவொரு சூழலிலும் நிலைமையை கணித்து அதற்கேற்றாற்போல் கையாளுபவர்.
pandiya1

பேட்டிங் வரிசையில் எந்த வரிசையில் தன்னை இறக்கிவிட்டாலும் அதிரடி காட்ட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் எதிரணியினரின் பந்துவீச்சை வெளுத்து வாங்குவார்.இளம்வீரரான இவர் அணிக்கு வந்த சிலமாதங்களிலேயே தன்னுடைய அபார திறமையால் அனைவராலும் ரசிக்கப்பட்டவர்.

- Advertisement -

இந்த ஆண்டு மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார் ஹர்திக்பாண்டியா.மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த ஹர்திக்பாண்டியாவிற்கு தற்போது இந்தியாவின் வலிமைவாய்ந்த குடும்பமான ரிலையன்ஸ் அம்பானி குடும்பத்தினரின் முழு ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

nita

நீடா அம்பானி ஒரு மேடையில் இளம்வயதினர் ஹர்திக்பாண்டியாவை போல வரவேண்டும் என்று புகழ்ந்துபேச அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் ஹர்திக்பாண்டியா தனது டிவிட்டரில் “நீடா அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வளவு சிறிய காலத்தில் இவர்களது ஒத்துழைப்பால் தான் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். உங்களின் ஆதரவு என்றுமே தேவை” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement