Hardik Pandya : யார் எதிரில் இருந்தாலும் ஜூலை 14 ஆம் தேதி இது நடக்கும் – பாண்டியா

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும்

Pandya
- Advertisement -

50 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடர் இங்கிலாந்து நாட்டில் கடந்த 30 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கருதப்படுகின்றன.

Pandya 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ; நான் இந்திய அணியில் விளையாடுவதை என் கனவாக நினைத்தேன். அது இப்போது நனவாகி நான் விளையாடி வருகிறேன். மேலும் உலக கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை அந்த ஆசையும் தற்போது நிறைவேறியுள்ளது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே நான் இதற்காக மட்டுமே முழுவதுமாக தீவிரமாக தயாராகி வந்தேன். இப்பொழுது உலகக்கோப்பை அணியிலும் எனக்கு இடம் கிடைத்துவிட்டது. சாதிக்க வேண்டிய நேரம் இது அதனால் எனது திறமையினை இந்த தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவேன்.

hardik2

மேலும் ஜூலை 14ம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் எந்த அணி எதிரில் இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்று கண்டிப்பாக என் கையில் உலகக்கோப்பை இருக்கும் அதுவே எனது ஆசை. உலககோப்பை வெல்லுவது மட்டுமே என்னுடைய இலக்கு இந்திய மக்களின் எண்ணமும் அதுதான். எனக்கு சவால் என்றால் மிகவும் பிடிக்கும் எனவே சவாலான போட்டிகளில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை அதனை நான் நேசித்து விளையாடுகிறேன் என்று ஹார்டிக் பாண்டியா கூறினார்

Advertisement