IND vs PAK : என்ன ஆனாலும் அது மட்டும் நடக்ககூடாதுனு நான் விளையாடுனேன் – கோலி குறித்து பாண்டியா நெகிழ்ச்சி

Hardik Pandya
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் 16-வது போட்டியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி இறுதிவரை த்ரிலிங்காக சென்று முடிவடைந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 159 ரன்களை குவிக்க பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றியையும் ருசித்தது.

இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய பாண்டியா 40 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் விராட் கோலி மட்டும் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்பதில் தான் கவனமாக இருந்ததாக பாண்டியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Virat Kohli 1

நான் களத்திற்கு வந்தபோது புல்லட்டையே (துப்பாக்கி குண்டு) வாங்கினாலும் விராட் கோலியின் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்று நினைத்தேன். மேலும் என்னாலும் அவர் எந்தவிதத்தாலும் ஆட்டம் இழக்கக்கூடாது என்றும் முடிவு செய்து கொண்டேன். ஏனெனில் இத்தனை ஆண்டு கால அனுபவம் உள்ள ஒரு வீரர் களத்தில் கடைசி வரை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இதேபோன்று பல இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே கடைசி வரை அவர் களத்தில் இருக்கும் பட்சத்தில் நம்மால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். உங்களைத் தவிர வேறு யாரும் இதுபோன்ற நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதும் எனக்கு தெரியும். போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கக்கூடிய விராட் கோலி நிச்சயம் அதை செய்வார் என்றும் நினைத்தேன்.

இதையும் படிங்க : 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த இந்திய அணி – விவரம் இதோ

கடைசி மூன்று ஓவர்களில் 40 ரன்கள் தேவை என இலக்கு இருந்தாலும் அதை அடிக்க முடியும் என்று நம்பினேன். இந்த போட்டியை என்னால் மறக்கவே முடியாது விராட் கோலி அற்புதமாக விளையாடியிருந்தார் என ஹார்டிக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement