லாவெண்டர் நிற சீருடையினை அணிந்து விளையாடியது ஏன்? குஜராத் அணியின் கேப்டன் – ஹார்டிக் பாண்டியா விளக்கம்

GT
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

GT vs SRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 101 ரன்களை குவித்து அசத்தினார்.

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு பிளே ஆப் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது குஜராத் அணி வீரர்கள் லாவண்டர் நிற சீருடை அணிந்து விளையாடியது அனைவரது மத்தியிலும் பார்க்கப்பட்ட விடயமாக மாறியது.

Mohit Sharma

மேலும் இது குறித்த விளக்கத்தையும் ஹார்டிக் பாண்டியா அளித்துள்ளார். அப்படி அவர்கள் ஏன் இந்த லாவண்டர் நிற சீருடையை அணிந்து விளையாடினார்கள் என்பது குறித்த தெளிவான தகவலையும் பாண்டியா பகிர்கையில் கூறியதாவது : குஜராத் அணி ஒவ்வொருவரின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சூழல் குறித்த அக்கறையையும் கொண்டுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நாங்கள் லாவண்டர் கலர் ஜெர்சி அணிந்து விளையாடினோம். லாவெண்டர் கலர் ரிப்பன் அனைத்து வகையான புற்று நோய்களையும் குறிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் நாங்கள் லாவண்டர் ஜெர்சி அணிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம் என ஹார்டிக் பாண்டியா தெளிவான விளக்கத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க : வீடியோ : மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நேர்ந்த பரிதாபம் – அவரே சொன்ன பின்னணியை கலாய்க்கும் ரசிகர்கள்

ஆண்டுதோறும் கோ க்ரீன் என பசுமையை முன்னிறுத்தி பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது போன்று இந்த வருடம் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத் அணி சொந்த மைதானத்தில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் லாவண்டர் ஜெர்சி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement