Hardik Pandya : கடைசி ஓவரில் என் மனதில் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது- பாண்டியா கருத்து

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்

Pandya
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Pollard

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Pollard

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

- Advertisement -

Pollard

போட்டி முடிந்து கடைசி ஓவர் குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : எனது இதயம் படபடப்பாக துடித்து கொண்டிருந்தது. பொல்லார்ட் ஒரு லெஜண்ட். இவர் ஒருவரால் மட்டுமே இதுபோன்ற போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். என்னுடைய வாழ்நாளில் இதுவே முதல் முறை 16 ரன்கள் ஒரு ஓவருக்கு தேவை என்ற நிலையில் பொல்லார்ட் ஆடியதை பார்த்து வியந்தேன்.
அவர் ஆடிய விதம் என்னை வியக்கவைத்தது.

Rahul

கடைசி ஓவரில் பொல்லார்ட் விரைவாக முடிப்பார் என்றே நினைத்தேன். ஆனால், அவர் அவுட் ஆன பிறகு 4 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அவர் அவுட் ஆகாமல் இருந்தால் அடுத்த பந்தே ஆட்டம் முடிந்திருக்கும். இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்றாகும். கடைசி ஓவர் படபடப்பு இருந்தும் நான் பொல்லார்ட் திறமையின் மீது நம்பிக்கை வைத்து வெற்றிக்காக காத்திருந்தேன் என்று பாண்டியா கூறினார்.

Advertisement