சேப்பாக்கம் மட்டுமில்ல.. வான்கடேவில் தோனி விளையாடும்போது இதுதான் நடக்கும் – மனம்திறந்த ஹார்டிக் பாண்டியா

Hardik and Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட இருக்கின்றன. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

வான்கடேவையும் தோனி தன் வசப்படுத்தி விடுவார் : ஹார்டிக் பாண்டியா

ஐபிஎல் வரலாற்றில் இரு பெரும் ஜாம்பவான் அணிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் இவ்விரு அணிகளும் இடையேயான முதல் போட்டியின் போது சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

அதே வெற்றிப் பயணத்தை இங்கும் தொடருமா? அல்லது சென்னை அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்துமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் தோனி விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

இவ்விரு அணிகள் எப்போது மோதிக் கொண்டாலும் மிகக் கடுமையான போட்டி இருக்கும். மும்பை அணி சேப்பாக்கத்தில் விளையாடும்போது அங்கு முழுவதுமாக சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தான் இருப்பார்கள். மும்பை அணியின் ரசிகர்களை அங்கு பார்ப்பது கடினம். அதே சமயத்தில் நாங்கள் இருவரும் வான்கடேவில் மோதிக்கொண்டால் இரு அணிக்குமே சரிசமமான ஆதரவு இருக்கும்.

- Advertisement -

அதே வேளையில் சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய அளவில் வான்கடே மைதானத்தில் சென்னை அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள். தோனி மும்பையில் விளையாடும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களையும் அவரது பக்கமாக இழுத்து விடுவார். அந்த அளவுக்கு தோனிக்கு வான்கடே மைதானத்தில் வரவேற்பு கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த 2 மேட்ச்ல தோத்துட்டா வேற வழியில்ல.. சிஎஸ்கே அணியை அந்த ரூட்டில் மாத்துவோம்.. கோச் பிளெமிங் அறிவிப்பு

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு தோனியுடையது தான் என்று கூறியுள்ள பாண்டியா எப்போதுமே அவரை புகழ்ந்து பேசிய வண்ணம் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement