IND vs NZ : உண்மையிலே நாங்க பண்ண இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

Devon Conway

- Advertisement -

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 59 ரன்களைம், துவக்க வீரர் டேவான் கான்வ 52 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா அணியானது 20 அவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

Washington Sundar.jpeg

மைதானம் இப்படி ஒரு தன்மையை வெளிக்காட்டும் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இரண்டு அணிகளுக்குமே இது சற்று சர்ப்ரைஸ்ஸாக இருந்தது. பழைய பந்தினை விட புதுப்பந்து அதிகமாக ஸ்விங் ஆகியது. மேலும் இந்த மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் அதிகமாக இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நாங்கள் ஆட்டத்திற்குள் வந்ததாக நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியிலிருந்து வெளியேறி விட்டோம். அதேபோன்று 177 ரன்களை விட்டுக் கொடுத்ததினை மோசமான பந்துவீச்சாகவே கருதுகிறேன். ஏனெனில் 20 முதல் 25 ரன்கள் வரை நாங்கள் குறைவாக கொடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs NZ : தயவு செஞ்சு இவர ட்ராப் பண்ணி அங்க அனுப்புங்க – தோல்வியை கொடுத்த இளம் வீரரை விளாசும் இந்திய ரசிகர்கள்

இருந்தாலும் இது இளம் வீரர்களை கொண்ட அணி என்பதால் இதைப் போன்ற தவறுகளில் இருந்து தான் நான் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement