எங்களை விட அவங்க ரொம்ப சூப்பரா ஆடிட்டாங்க.. தோல்விக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட – ஹார்டிக் பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியைப் பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்வி குறித்து : ஹார்டிக் பாண்டியா பேச்சு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்த்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 18.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை மட்டும் இரண்டு 160 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சி.எஸ்.கே அணி தங்களது பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த சீசன் எங்களுடையது அல்ல. இந்த ஒரு இரவு மட்டும் அல்ல நாங்கள் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடவில்லை. எங்களை விட சிஎஸ்கே அணியின் பவுலர்கள், பீல்டர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை அணியை இப்படி எளிதாக வீழ்த்த இவர்களே காரணம்.. வெற்றிக்கு பிறகு – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் அந்த ரன்களுக்கு செல்ல முடியவில்லை. முதல் 10 ஓவருக்கு பிறகு எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்சை நிறைவு செய்ய முடியவில்லை. சிஎஸ்கே அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தியுள்ளனர். இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் ஹார்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement