ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் பாகிஸ்தான அணியை 147 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா மூன்று விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதோடு ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் 35 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் 33 ரன்கள் அடித்து பினிஷிங் செய்த ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பாண்டியா கூறுகையில் :
பந்துவீச வந்த போது சூழ்நிலையை அறிந்து பந்து வீச நினைத்தேன். அதிலும் குறிப்பாக ஷாட் பால் மற்றும் கடினமான லென்த்தில் பந்து வீசுவது என்னுடைய பலம். அதனை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பந்து வீசினால் விக்கெட்டுகள் விழும் என்று நினைத்தேன். அந்த வகையில் நான் மிகச் சிறப்பாக பந்துவீசினேன்.
இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தானை சாய்த்த இந்தியா – இந்திய ரசிகர்களை மிஞ்சும் வகையில் கொண்டாடிய ஆப்கன் ரசிகர்களின் வைரல் வீடியோ
அதோடு பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த போது கடைசி ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் என்னால் கடைசி ஓவரில் 15 ரன்கள் வரை கூட அடித்திருக்க முடியும் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



