ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை உயிர்ப்படன் வைத்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.
இதுக்காகத்தான் வெயிட் பண்ணினு இருந்தேன் : ஹார்டிக் பாண்டியா
இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கிய இந்திய அணி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெடுகளை இழந்து 256 ரன்களை குவித்து அசத்தியது.
பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 184 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா 23 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதேபோன்று பந்து வீச்சிலும் 3 ஓவர்களை வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :
உண்மையிலேயே இந்த போட்டியில் 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு போட்டிகளாக நான் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதனால் இந்த போட்டியில் அரைசதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நான் உண்மையிலேயே பந்துகளை அடித்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இதையும் படிங்க : நேர்மையா சொல்லனும்னா.. இன்னும் கொஞ்சம் நாங்க தப்பு பண்ணியிருக்கோம் – வெற்றிக்கு பிறகு கேப்டன் பேச்சு
அதுமட்டும் இன்றி பந்தை சரியாக டைம்ங்கில் அடித்தால் சிக்சருக்கு செல்லும் என்று நினைத்து சிக்ஸர்களை விளாசினேன். இந்த போட்டியில் நல்ல ரிதம் கிடைத்துள்ளது எனவே இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பேன் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



