நேர்மையா சொல்லனும்னா.. இன்னும் கொஞ்சம் நாங்க தப்பு பண்ணியிருக்கோம் – வெற்றிக்கு பிறகு கேப்டன் பேச்சு

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பரவசப்படுத்தியது.

வெற்றி பெற்றாலும் தவறு செய்து விட்டோம் : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான அபிஷேக் சர்மா 55 ரன்களையும், ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்ததால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது :

இந்த போட்டிக்கு முன்னதாக லீக் சுற்று ஆட்டங்களில் என்ன நடந்தது? கடைசியாக அகமதாபாத் மைதானத்தில் என்ன நடந்தது? என்பதை எல்லாம் தள்ளி வைத்து இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று முழு மனதுடன் விளையாடினோம். எங்களுடைய அணியின் நிர்வாகமும் கடந்த காலங்களில் நாங்கள் செயல்பட்ட விதத்தை எடுத்துக் காண்பிக்க இம்முறை நல்ல நம்பிக்கையுடன் இங்கு விளையாட வந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த வேர்லடுகப்ல முதலிடம்.. ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடம்.. ஜிம்பாப்வேவை பந்தாடி – இந்திய அணி சாதனை

அந்த வகையில் இன்று துவக்க வீரர்கள் முதல் ஏழாம் வரிசை வரை அனைவருமே ரன் குவிப்பில் பங்களிப்பை வழங்கியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் பந்து வீச்சில் இன்னும் ரன்களை குறைவாக விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்/ ஆனால் பந்துவீச்சில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தோம். இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement