பந்து வீசுவது எந்த பவுலர்னு நான் பாக்க மாட்டேன். ஒன்லி அடிதடி மட்டும்தான் – மிரட்டல் விட்ட மும்பை வீரர்

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.

kkrvsmi

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.

Dekock

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த மும்பை அணியின் அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டியில் : நான் மூன்று வருடங்களாக பேட்டிங் சிறப்பாக செய்து வருகிறேன் என்றும் சிறப்பான பேட்டிங்கை செய்வதில் மகிழ்ச்சி. ஒரு விடயத்தில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன் அதாவது என்னுடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் ஷேப் ஆகியவற்றை இழக்காமல் விளையாட பயிற்சி எடுத்து வருகிறேன். போட்டியின் இறுதி வரையில் பேட்டிங் விளையாட என் எனது விருப்பம் அதுமட்டுமின்றி போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று.

pandya

நான் செய்வதெல்லாம் எளிதான ஒரு விடயம்தான். பந்தை பார்ப்பது அடிப்பது மட்டும் தான். அது மட்டுமே எனது பேட்டிங்கை எளிதாக்கி உள்ளது. நான் எந்த பவுலர் எனக்கு எதிராக பந்து வீசுகிறார் ? என்றெல்லாம் யோசித்தது கிடையாது. வீசுவது ஒரு பவுலர் அது மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றபடி அனைத்து பந்துகளையும் அடிக்க நான் தயாராக இருப்பேன் என்று அது கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement