- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட கரியரே மாறுனதுக்கு அந்த ஒரு மேட்ச் தான் காரணம்.. 10 ஆண்டு நினைவை பகிர்ந்த – ஹார்டிக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஹார்டிக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அவ்வப்போது காயம் காரணமாக பின்னடைவை சந்தித்தாலும் மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்கும் அவர் சர்வதேச போட்டிகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

என்னுடைய கரியரை மாற்றிய ஆட்டம் : ஹார்டிக் பாண்டியா

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள வேளையில் இந்த மூன்று போட்டிகளிலும் பாண்டியாவின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதோடு எதிர்வரும் போட்டிகளிலும் அவர் இதேபோன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தி நிச்சயம் இந்திய அணிக்காக கோப்பையை கைப்பற்றி கொடுப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் திருப்பு முனையை ஏற்படுத்திய தருணம் எது? என்பது குறித்த தனது பத்து ஆண்டுகால நினைவினை தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னுடைய கரியரில் முக்கியமான போட்டியாக நான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியை கூறுவேன். ஏனெனில் அந்த உலகக்கோப்பை தொடரில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தது. அப்போது பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் என் முன்னரே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

ஆனால் கடைசி பந்து முடியும் வரை எதுவும் உறுதி கிடையாது என்பதை உறுதியாக நம்பினால் ஒரு சதவீதம் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் கூட அதை கொண்டு செல்ல வேண்டும் என்ற சவாலை எனக்குள் வைத்துக்கொண்டு அந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றேன்.

இதையும் படிங்க : ஸ்லெட்ஜிங் வேணாம்.. பாகிஸ்தான் அணிக்கெதிராக இதை மட்டும் பண்ணுங்க.. இந்திய வீரர்களுக்கு – கேப்டன் அட்வைஸ்

அந்த போட்டி என்னுடைய கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எவ்வளவுதான் நாம் அழுத்தத்தை சந்தித்தாலும் எதிரணியினர் வெற்றியை கொண்டாட தொடங்கினாலும் கடைசி நிமிடம் வரை வெற்றிக்கு போராட வேண்டும் என்கிற எண்ணம் அந்த போட்டியில் இருந்து தான் வந்தது. அந்த ஒரு போட்டி என்னுடைய வாழக்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -