ஸ்லெட்ஜிங் வேணாம்.. பாகிஸ்தான் அணிக்கெதிராக இதை மட்டும் பண்ணுங்க.. இந்திய வீரர்களுக்கு – கேப்டன் அட்வைஸ்

SKY
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளை எதிர்த்து எளிதாக வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இந்திய அணி மூன்றாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான அணியை சந்தித்தது.

இந்திய வீரர்களிடம் வேண்டுகோள் வைத்த : சூரியகுமார் யாதவ்

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக எவ்வாறு செயல்படும்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் எந்த ஒரு சிரமமும் இன்றி 61 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஏ பிரிவில் மூன்று வெற்றிகளை பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் முக்கிய அறிவுரை ஒன்றை போட்டியின் இடையே வழங்கினார் என்றும் அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆசிய கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் பங்கேற்றதால் இந்த போட்டியில் கடுமையான ஸ்லெட்ஜிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்களிடம் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் : போட்டியில் நாம் வெற்றி பெறுவது மட்டும்தான் நமக்கு வேண்டும். அதை தவிர்த்து பாகிஸ்தான் வீரர்களுடன் யாரும் தேவையில்லாமல் எதுவும் பேசக்கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 டக் அவுட்டான என்ன? அபிஷேக் சர்மா மீது எங்களுக்கு சந்தேகம் இல்ல – பேட்டிங் கோச் அளித்த பேட்டி

நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றி நமது மக்களுக்கான வெற்றி எனவே எந்த ஒரு ஸ்லெட்ஜிங்கிலும் ஈடுபடாமல் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டும் பாருங்கள் என்று சூரியகுமார் யாதவ் இந்திய வீரர்களிடம் வேண்டுகோள் வைத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement