Hardik Pandya : என்னிடம் இருந்து இதனை மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் அதனை நன்றாக செய்கிறேன் – பாண்டியா பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக்

Hardik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 41 ரன்களும், லின் 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Rohith

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஹார்டிக் பாண்டியா கூறியதாவது : பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதினை பெறுவது சிறப்பான விடயமாகும். ஒரு பேட்ஸ்மேன் பந்தினை பலமாக அடிப்பதை விட வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் இருந்து சிறப்பான பந்துவீச்சினை எதிர்பார்ப்பதில்லை. நானும் அதனையே நினைக்கிறன். க்ருனால் எப்போதும் என்னை இடுப்பு மற்றும் தோள்பட்டைகளில் இருந்தும் பலத்தினை கொண்டு பந்துவீச சொல்வார்.

ஆனால், எனக்கு எங்கிருந்து பந்துவீச இவ்வளவு சக்தி கிடைக்கிறது என்று தெரியவில்லை. நான் 4 ஓவர்கள் மட்டும்தான் வீசுவேன் என்று இல்லை. ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் முழுவதுமாக வீசும் அளவிற்கு திறமையாகவே உள்ளேன் என்று ஹார்டிக் பாண்டியா கூறினார்.

Advertisement