விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய ஹார்டிக் பாண்டியா.. ரோஹித் சர்மாவையும் – தாண்ட வாய்ப்பு

Hardik Pandya
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர அனுபவ ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் தொடர்ச்சியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வருகிறார். அடிக்கடி அவருக்கு காயம் ஏற்படுவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு முக்கியமான தொடர்களில் மட்டுமே அவர் விளையாடுகிறார்.

விராட் கோலியை முந்திய ஹார்டிக் பாண்டியா :

அதோடு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்து விளங்கும் அவர் முக்கியமான வீரர் என்பதனால் அவரை இந்திய அணியின் நிர்வாகமும் சரியான அளவில் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்துக் கொண்ட அவர் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர் முதன்மை வீரராக பார்க்கப்படும் வேளையில் இந்த நியூசிலாந்து தொடரில் தற்போது தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் நேற்றைய இரண்டாவது போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் தகர்த்துள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக ரோஹித் சர்மா 159 ஆட்டங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 125 ஆட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்த வேளையில் நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தனது 126-வது போட்டியில் விளையாடியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதுக்கு பிறகு இந்த ஒரு கேள்வி தான் என்னிடம் இருந்தது – இஷான் கிஷன் பேட்டி

இதன் மூலம் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 126 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2027 ரன்களையும், 102 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் ரோஹித் சர்மாவை மிஞ்சி அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரராகவும் அவர் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement