கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஹார்டிக் பாண்டியா செய்த செயல் – எழுந்து நின்று பாராட்டிய பொல்லார்ட்

Pandya-2

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியை விளையாடியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதில் அந்த அணியின் ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 61 ரன் குவித்தார். இதில் ஏழு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இந்த போட்டியின் போது அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாண்டியா அரைசதம் அடித்தார்.

Pandya

அரைசதம் அடித்த பின்னர் எப்போதும் போல் அரை சதம் அடித்ததற்காக பேட்டை உயர்த்தி காட்டாமல் முட்டிபோட்டு தனது ஒரு கையை உயர்த்தி காட்டினார். இது என்னவென்றால் அமெரிக்காவில் காவல்துறை ஒருவர் கருப்பின இளைஞர் ஜார்ஜ் என்னும் ஒருவரை அராஜகமாக கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் உலகம் முழுக்க #BlackLivesMatter என்னும் முன்னெடுப்பு பிரச்சாரம் செயல்பட்டு வருகிறது.

கருப்பின மக்களுக்கு எதிரான அத்துமீறல் மற்றும் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விளையாடப்படும் கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் ஆகிய அனைத்து போட்டிகளிலும் அவ்வப்போது #BlackLivesMatter என்ன முன்னெடுப்பை ஆதரிக்கும் வகையில் வீரர்கள் முட்டிக்கால் போட்டு கைகளை உயர்த்தி காட்டுவார்கள்.

Pandya 1

இந்த #BlackLivesMatter முன்னெடுப்பை ஐபிஎல் தொடரில் தற்போது வரை துவங்கவில்லை என்று பலரும் பேசி வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக அரைசதம் அடித்து விட்டு பாண்டியா இதனை முன்னெடுத்தார். இதனை பார்த்த கெரோன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் போன்றவர்கள் மனம் நெகிழ்ந்து அவரை பாராட்டினார்.

- Advertisement -