MI vs KXIP : வாய்க்கொழுப்பால் வம்பிழுத்த வெளிநாட்டு வீரர். மல்லுக்கட்டி நின்ற பாண்டியா – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நல்ல இலக்கினை மும்பை அணிக்கு செட்செய்தது. மும்பை அணியும் துவக்கம் முதலே திணறி வந்ததால் பஞ்சாப் அணியினர் பதட்டமின்றி இருந்தனர்

Hardik
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நல்ல இலக்கினை மும்பை அணிக்கு செட்செய்தது. மும்பை அணியும் துவக்கம் முதலே திணறி வந்ததால் பஞ்சாப் அணியினர் பதட்டமின்றி இருந்தனர். அப்போது பஞ்சாப் அணியின் வீரரான வில்ஜியான் ஹார்டிக் பாண்டியாவை பார்த்து முறைத்த வாறு வம்பு இழுத்தார். இதற்கு சற்று பயப்படாமல் அவரை நோக்கி சென்று முறைத்தார் பாண்டியா. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த மோதலுக்கு காரணம் எதுவும் மைக்கில் பதிவாகவில்லை. இருப்பினும், பாண்டியாவை சீண்டவே அவரிடம் சென்று நடனமாடியபடி பேசிவிட்டு சென்றார் பஞ்சாப் அணி வீரர். ஆனால், அதற்கு தக்க பதிலடி தரும் விதமாக நின்று முறைத்துவிட்டு ஒருசில வார்த்தைகளை உதிர்த்தபடி சென்றார் ஹார்டிக் பாண்டியா.

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Pollard

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Rahul 1

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Pollard

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

Advertisement