நீங்க சொன்னதை சாதிச்சிடீங்க. தமிழக வீரர் தினேஷ் கார்த்திகை பாராட்டி தள்ளிய – ஹார்திக் பாண்டியா

Hardik Pandya Dinesh Karthik
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 2 க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதை தொடர்ந்து நாளை பெங்களூரு மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

Dinesh Karthik and Hardik Pandya

இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் திகழ்ந்தார். ஏனெனில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 81 ரன்களை மட்டுமே குவித்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த போது பாண்டியாவுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் தனது அதிரடியால் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் என்று கூறலாம்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் பாண்டியாவும் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர் 55 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தார். அதோடு 37 வயதான இவர் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா தினேஷ் கார்த்திக்கை பாராட்டி சில கருத்துகளை பிசிசிஐ வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் :
அந்த உரையாடல்கள் எனக்கு நியாபகம் இருக்கிறது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதே எனது இலக்கு என்றும், இந்த உலக கோப்பை தொடரில் விளையாடுவதே எனது குறிக்கோள் என்றும் அதற்காக அனைத்தையும் நான் கொடுக்கப் போகிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். தற்போது அவர் அதை சாதித்து இருப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தினேஷ் கார்த்திக்கின் இந்த பிரமாதமான ஆட்டம் எங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றது.

இதையும் படிங்க : IND vs RSA : டி20 கிரிக்கெட்டில் இதுதான் அவரோட வீக்னெஸ் – ரிஷப் பண்ட்டை எச்சரிக்கும் ஜாம்பவான்

மக்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள போகிறார்கள். “ஆல் தி பெஸ்ட் சகோதரா” உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பாண்டியா அந்த வீடியோவில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement