நல்ல ஷேப்போடு சரியான மைன்ட்செட்டோடு ரெடி ஆயிட்டேன். அடித்து நொறுக்க நான் தயார் – சவால் விடுத்த மும்பை வீரர்

MI
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

- Advertisement -

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ? எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா முகுதுப் பகுதியில ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் உடல்தகுதி பெற்று விளையாட தயாரானார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

Pandya

இந்நிலையில் ஐபிஎல் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, ஒரு வருடம் விளையாடவில்லை என்பதால தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சிறந்த முறையில் ஐபிஎல் தொடருக்கு தயாராகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘தற்போது நான் பந்தை அடிப்பதை வைத்து பார்க்கும்போது நல்ல ஷேப் மற்றும் மனநிலையை பெற்றுள்ளேன். நான் களத்தில் இறங்கி எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிறேன் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். என்னுடைய எண்ணம் சிறப்பான முறையில் வெளிப்படும் என நினைக்கிறேன்.

Pandya

நான் எவ்வளவு தூரம் போட்டியுடன் செல்கிறேன். எவ்வளவு நாட்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது விஷயம் இல்லை. மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும்போது, அது மதிப்பிற்குரியதாக இருக்க வேண்டும். நான் சிறப்பான முறையில் தயாராகி உள்ளேன். சிறப்பான விசயங்கள் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்’’ என்றார்.

Advertisement