2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு விளையாடுங்க, ஷேன் வாட்சனின் கோரிக்கைக்கு பாண்டியா நேரடி பதில்

Hardik Pandya
- Advertisement -

வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த முறை நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் அப்போட்டியில் களமிறங்க உள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்ற நிலையில் 4வது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் ஆல்-ரவுண்டர் விளையாடுவது வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் 2017ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு இதே இங்கிலாந்தின் நாட்டிங்கம் மைதானத்தில் 5 விக்கெட்களை எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

pandya 2

- Advertisement -

அதனால் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ந்த நிலையில் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்துக்கு பின் தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் அதிலிருந்து குணமடைந்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக மிகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த அவர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

பாண்டியா வெளிப்படை:
அதனால் ஒருநாள் மற்றும் டி20 உள்ளிட்ட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக முன்னேறியுள்ள அவர் இப்போதும் முழுமையாக பந்து வீச முடியாமல் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது மட்டுமே தேவையான அளவு பந்து வீசி வருகிறார். அதன் காரணமாக 5 நாட்கள் நடைபெறும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டை மறைமுகமாக புறக்கணித்துள்ள அவருக்கு பதிலாக ஷார்துல் தாக்கூர் போன்ற கணிசமான அளவு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆல் ரவுண்டர்களாக விளையாட வைக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Watson-1

அதில் தாக்கூர் வெற்றியில் பங்காற்றும் அளவுக்கு திறமை கொண்டவர் என்றாலும் பாண்டியா அளவுக்கு நிகரானவரா என்றால் நிச்சயமாக கிடையாது. அதனால் மிகச் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி ஃபைனலில் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்க விரும்புவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நேற்று முன்தினம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவுக்கு 10% கூட தற்போது தகுதியாக இல்லையென்று அவருக்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்டியா சமீப காலங்களில் டெஸ்ட் அணியில் விளையாடாமல் நேரடியாக ஃபைனலில் மற்றொரு வீரரின் இடத்தில் விளையாட விரும்பவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது டெஸ்ட் அணியில் மீண்டும் விளையாட வேண்டுமெனில் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக போராடி வாய்ப்பு பெறுவதை விரும்புவதாக தெரிவிக்கும் ஹர்திக் பாண்டியா இது பற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “இல்லை. நான் ஒழுக்க (எதிக்ஸ்) ரீதியாக மிகவும் வலிமையான நபர். அதன் காரணமாக அந்த இடத்தில் விளையாடுவதற்கு 10% அல்ல 1% கூட தயாராக இல்லை. எனவே நேரடியாக ஃபைனலில் வந்து ஒருவரின் இடத்தை பிடித்து நான் விளையாடுவது சரியான நெறிமுறையாக இருக்காது”

Hardik-Pandya

“ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட விரும்பினால் அதற்காக ஆரம்பம் முதல் துவங்கி போராடி எனக்கான இடத்தை பெறுவேன். அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் அல்லது அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் நான் விளையாடுவதற்கான தேர்வில் இல்லை. எனவே எனக்கான இடத்தை பிடித்துள்ளேன் என்று உணராத வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : முதலாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமா அவர் விளையாடமாட்டாரு – உறுதிசெய்த பாண்டியா

முன்னதாக காயமடைந்த பின் டி20 உட்பட வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடி 15 கோடிகளை கொட்டிக்கொடுக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதும் என்ற எண்ணத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு எந்த முயற்சிகளையும் பாண்டியா எடுக்காமல் இருந்து வந்தார். தற்போது இந்த கருத்தால் அவர் அதை புறக்கணித்து விட்டார் என்பது தெளிவாகிறது.

Advertisement