அக்சர் படேலுக்கு கடைசி ஓவரை வீச கொடுத்தது இதற்காகத்தான் – போட்டிக்கு பின் கேப்டன் பாண்டியா சொன்ன பதில்

Hardik-Pandya-and-Axar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டமானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இலங்கை அணி எதிராக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது.

IND vs SL

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது துவக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஷனகா, ஹசரங்கா மற்றும் கருனரத்னே ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டத்தினால் படிப்படியாக வெற்றியை நோக்கி நகர்ந்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். அந்த ஓவரில் 16 ரன்கள் சென்றதன் காரணமாக கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முக்கியமான அந்த கடைசி ஓவரை கேப்டன் பாண்டியா வீசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் அந்த இறுதி வரை வீசினார்.

Axar Patel and Hardik Patel

குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் பந்து வீசினால் நிச்சயம் பேட்டிங் செய்யும் அணிதான் வெற்றி பெறும் என்பதை நிதர்சனமான உண்மை. ஆனால் இந்த போட்டியில் சற்று சுதாரித்து வீசிய அக்சர் பட்டேல் அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் முக்கியமான அந்த கடைசி ஓவரை அக்சர் பட்டேலுக்கு வழங்க என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் பாண்டியா போட்டி முடிந்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது : இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகள் எதிர்வரும் போட்டிகளிலும் வரும் அந்த வேளையில் நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டியின் அதிக அழுத்தமான சூழலில் நான் அக்சர் பட்டேலை பந்து வீச அழைத்தேன்.

இதையும் படிங்க : IND vs SL : தொடரை வெல்லுமா இந்தியா, 2வது போட்டி நடைபெறும் புனே மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அவரும் மிகச்சிறப்பாக பந்துவீச்சினை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்று கொடுத்தார். இந்த அழுத்தமான சூழ்நிலையில் அவர் பந்து வீசியது அவருக்கு மிகச் சிறந்த பாடத்தை கொடுக்கும். எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நேரத்திலும் அவர் பந்துவீச தயாராக இருக்க வேண்டும் என்கிற காரணத்தினாலேயே கடைசி ஓவரை அக்சர் பட்டேலுக்கு வழங்கியதாக ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement