IND vs AUS : இன்னைக்கு நம்ம டீமோட ஓப்பனர்ஸ் இவங்கதான். போட்டிக்கு முன்னரே – கன்பார்ம் செய்த கேப்டன் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்துள்ளது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று மார்ச் 17-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது மார்ச் 17-ஆம் தேதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்காததால் அவருக்கு பதிலாக எந்த வீரர் துவக்க வீரராக களம் இறங்குவார் என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது.

Shubman-Rohit-Ishan

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்த முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியின் துவக்க வீரர்கள் யார்? என்பதனை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அதன்படி சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே முதல் ஒருநாள் போட்டியின் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஹார்டிக் பாண்டியா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஜடேஜாவின் இடத்தை இந்திய அணியில் அடுத்து நிரப்பப்போவது இவர்தான். இளம்வீரரை பாராட்டிய ரிக்கி பாண்டிங்

இவர்கள் இருவரும் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் என்பதினாலும், இருவருமே அற்புதமான பார்மில் இருப்பதினாலும் இவர்கள்தான் சரியான துவக்க ஜோடி என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement