- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் விளையாட இவர் தகுதியானவர். பேட்டை பரிசளித்து அயர்லாந்து வீரரை பாராட்டிய பாண்டியா

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதனை தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எளிதாக வீழ்த்தியிருந்தாலும் அயர்லாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான 22 வயது இளம் வீரர் ஹாரி டெக்டர் தனது அபாரமான ஆட்டம் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்றே கூற வேண்டும். ஏனெனில் 33 பந்துகளை சந்தித்த அவர் இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 64 ரன்களை குவித்து அசத்தினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த பெரிய அணியாக பார்க்கப்படும் இந்திய அணியின் பவுலர்களை எதிர்த்து இந்த வீரர் ஆடிய ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படி இருந்தது. இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அவரது ஆட்டம் குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் ஹாரி டெக்டர் மிகவும் அற்புதமான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடினார். 22 வயதான அவர் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவருக்கு நான் எனது ஒரு பேட்டை பரிசாக வழங்க இருக்கிறேன். அந்த பேட்டை கொண்டு அவர் பவுண்டரி, சிக்சர்கள் என விளாசி ஐபிஎல் தொடரில் இடம் பிடிக்க வேண்டும் அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று ஹர்டிக் பாண்டியா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : IND vs IRE : முதல் போட்டியிலேயே வேறு எந்த கேப்டனும் படைக்காத புதிய வரலாற்று சாதனை – விவரம் இதோ

ஹாரி டெக்டருக்கு சரியான வழிகாட்டுதல் இருந்து முறையான பயிற்சி கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் விளையாடுவார் என்று ஹார்டிக் பாண்டியா அவரை பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by