ஆல்டைம் சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வுசெய்த ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

Pandya
- Advertisement -

இந்தியாவில் கடந்த 12 வருடங்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் ஆயிரக்கணக்கான வீரர்கள் என விளையாடி உள்ளனர். சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் பல நட்சத்திர வீரர்கள் விளையாடியுள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரை பற்றி ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.

Pandya

- Advertisement -

மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த அணி ஒன்றையும் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருக்கும் இவர் சமூக வலைதளம் ஒன்று சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இது பற்றி பேசியுள்ளார். மேலும் இந்த அணிக்கு கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பத்தை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அணியில் துவக்க வீரராக இடதுகை அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் மற்றும் தன்னுடைய கேப்டனான ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இருவரும் அட்டகாசமான அதிரடி வீரர்கள் ஆவர்கள் . மூன்றாவது இடத்தில் தனது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் நான்காவது இடத்தில் மிஸ்டர் 360 டிகிரி ஏபி டிவிலியர்சையும் தேர்வு செய்துள்ளார்.

வித்தியாசமாக ஐந்தாவது இடத்தில் இடதுகை ஆட்டக்காரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. அதன் பின்னர் விக்கெட் கீப்பராக கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்திருக்கிறார்.
இவர் கேப்டனாகவும் செயல்படுவார் போலிருக்கிறது.

- Advertisement -

rashid-khan

ஆல்-ரவுண்டராக தன்னைத் தானே தேர்வு செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா . சுழல் பந்துவீச்சாளர்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரஷித் கான் ஆகியோரரை தேர்வு செய்துள்ளார்.வேகப்பந்து வீச்சிற்கு தனது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இருவரைத் தேர்வு செய்துள்ளார். அவர்கள் வேறு யாருமில்லை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகிய இருவரும்தான்.

ஹர்திக் ஆல் டைம் லெவன் :

- Advertisement -

கிறிஸ் கெயில்

ரோஹித் சர்மா

- Advertisement -

விராட் கோலி

டிவிலியர்ஸ்

சுரேஷ் ரெய்னா

தோனி

ஹர்திக் பாண்டியா

சுனில் நரைன்

ரசித் கான்

ஜஸ்பிரித் பும்ரா

லசித் மலிங்கா

Advertisement