IND vs SL : டாஸ் வென்று ரிஸ்க்கான முடிவை கையிலெடுத்த கேப்டன் பாண்டியா – இது எங்க போயி முடியப்போகுதோ

Hardik-Pandya-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கும் வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மேற்கொள்ளவில்லை. மேலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி இந்த போட்டியிலும் விளையாடும் என்று அறிவித்தார்.இதன் காரணமாக தற்போது இந்திய அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி விளையாடி வருகிறது.

Hardik-Pandya

இந்நிலையில் அவர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய எடுத்த முடிவு தற்போது தேவையான ஒன்றா என்று பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் எப்போதுமே இந்திய அணியின் பலமாக பார்க்கப்படுவது சேசிங் செய்வதுதான். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே ஹர்திக் பாண்டியா சவாலை எதிர்கொள்ள விரும்பும் ஒரு வீரர்.

- Advertisement -

அதனால் முதலில் பேட்டிங் செய்து அவர்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு சாதகம் என்பது போட்டியின் முடிவிலேயே தெரியவரும். அதன்படி இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம், புதிய தேர்வுக்குழுவை அறிவித்த பிசிசிஐ, வீழ்ச்சி ஆரம்பமென விளாசும் ரசிகர்கள்

1) இஷான் கிஷன், 2) சுப்மன் கில், 3) ராகுல் திரிபாதி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஷிவம் மாவி, 9) உம்ரான் மாலிக், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement