சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய ஹார்டிக் பாண்டியா – என்ன காரணம்?

Hardik Pandya
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடைசியாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பாமல் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது மீண்டும் முழு உடற்தகுதியுடன் பலமாக திரும்பி இருக்கிறார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து விலகிய ஹார்டிக் பாண்டியா :

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக இரண்டு ஆட்டங்களில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் முழு நான்கு ஓவர்களையும் வீசியிருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் எஞ்சியுள்ள சையத் முஷ்டாக் அலி தொடரின் போட்டிகளில் இருந்து ஹார்டிக் பாண்டியா வெளியேறியுள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வாகியுள்ளார்.

அதன் காரணமாக சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து ஹார்டிக் பாண்டியா விலகியுள்ளார். தற்போது இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் வேளையில் டிசம்பர் 6-ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியானது நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் கட்டாக் நகருக்கு சென்றுள்ள டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாகவே அந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக ஹார்டிக் பாண்டியா முன்கூட்டியே சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஃபினிஷர் இல்லாததே தோல்விக்கு காரணம்.. 3வது போட்டியில் அந்த 2 பேருக்கு சான்ஸ் கொடுங்க.. அஸ்வின் பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஹார்டிக் பாண்டியா கடந்த பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த டி20 தொடரானது ரசிகர் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement