
கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ஹர்திக் பாண்டியா அட்டகாசமாக விளையாடி 6 பௌண்டரி 4 சிக்சருடன் 59* (18) ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவை 74 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக தேவால்ட் ப்ரேவிஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இந்த வெற்றிக்கு 57* ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் தம்மை விட எப்போதும் இந்தியாவின் வெற்றியே முக்கியம் என்ற மனநிலையுடன் விளையாடுவதே தம்முடைய சிறந்த ஆட்டத்திற்கு காரணம் என்று பாண்டியா தெரிவித்துள்ளார். கம்பேக் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது பற்றி அவர் விரிவாக பேசியது பின்வருமாறு.
“என்னுடைய ஷாட்டுகளுக்கு நான் ஆதரவளிக்க வேண்டும். அதே சமயம் பிட்ச்சில் கொஞ்சம் சவால் இருந்ததால் நீங்கள் உற்சாகத்துடன் விளையாட வேண்டும். இவை அனைத்தும் பந்தை உடைக்கப் பார்க்காமல் அதிக டைமிங் கொடுத்து விளையாடுவதைப் பற்றியதாகும். ஃபிட்னஸ் பொறுத்த வரை கடந்த 6 – 7 மாதங்களாக எனக்கு நன்றாக உள்ளது. பின்னணியில் செல்லும் கடினமான உழைப்பைப் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை”
“இருப்பினும் கடந்த 50 நாட்களாக நான் விரும்பக் கூடியவர்களிடமிருந்து வெளியே சென்று என்சிஏவில் நேரத்தைச் செலவிட்டு அனைத்தையும் கவர் செய்வதற்கு உறுதியாக இருந்தேன். அதனால் கம்பேக்கில் இப்படிப்பட்ட வெற்றி கிடைப்பது திருப்தியானது. எப்போதும் ஹர்திக் பாண்டியா என்ன விரும்புகிறார் என்பதைக் காட்டிலும் இந்தியாவின் வெற்றியே முக்கியம் என்பதற்கே நான் ஊக்கம் கொடுக்கிறேன்”
இதையும் படிங்க: இதை எதிர்பாக்கல.. 101 ரன்களில் தெ.ஆ’வை வீழ்த்த இதான் காரணம்.. இந்திய கேப்டன் சூரியகுமார் பேட்டி
“எனது மனநிலை உதவுகிறது. எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதே எனது குறிக்கோள். அதுவே எனக்கு உதவுகிறது. கேசவ் மகாராஜ் எங்களுடைய அக்சர் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். எனவே அவரை டார்கெட் செய்தது திட்டம் கிடையாது. ஆனால் பந்து எனது வட்டத்திற்குள் இருந்தால் அடிப்பேன். எனக்கு எதிராக வாய்ப்பை எடுத்த அவருக்கு எதிராக நானும் வாய்ப்பை எடுத்தேன். பிட்ச்சில் கணக்கிட்டு அவரை அடிக்க முயற்சித்தது வேலை செய்தது. சரியான பவுலர்களை கண்டறிந்து அடிப்பது முக்கியம். அது வேலை செய்யும் போது நன்றாகத் தெரியும்” என்று கூறினார்.