IND vs NZ : முதல் டி20 போட்டியில் பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பில்லை – அவங்க தான் ஓப்பனிங், பாண்டியா அதிரடி அறிவிப்பு

Hardik Pandya Prithvi Shaw
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. வரும் அக்டோபரில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. கடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இளம் அணி உருவாக்கப்பட்டு வருகிறது.

IND vs NZ

- Advertisement -

அந்த வரிசையில் ஏற்கனவே கடந்த நவம்பரில் இதே நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்த இளம் அணி சமீபத்தில் இலங்கையை தங்களது சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்து 2023 புத்தாண்டு வெற்றியுடன் துவங்கியது. அந்த வகையில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இம்முறை நியூசிலாந்தையும் தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் பிரிதிவி ஷா நீண்ட நாட்கள் கழித்து தேர்வானது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பாண்டியா அறிவிப்பு:
கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து வீரேந்திர சேவாக் போல தன்னை அதிரடியான தொடக்க வீரராக அடையாளப்படுத்தினார். ஆனால் நாளடைவில் தொடர்ச்சியாக சிறப்பான செயல்படுகளை வெளிப்படுத்திய தவறிய அவர் 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மோசமாக செயல்பட்டதால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.

கடைசியாக கடந்த 2021 ஜூலை 25இல் இலங்கை மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடியிருந்த அவர் அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 363 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும் ரஞ்சி கோப்பையில் அசாமுக்கு எதிராக 379 (383) ரன்களை வெளுத்து வாங்கிய அவர் தனது உடல் எடையையும் குறைத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஒரு வழியாக மீண்டும் இந்திய அணியில் தற்போது தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

அதனால் சரியாக 550 நாட்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவார் என்று நிறைய ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் தற்சமயத்தில் இரட்டை சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக அறிவித்துள்ளார். அவருடன் கடந்த மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இசான் கிசான் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்குவார் என்று முன்கூட்டியே அறிவித்துள்ள அவர் இது பற்றி போட்டிக்கு முன்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசியது பின்வருமாறு.

Hardik-Pandya-1

“இல்லை சார். சமீபத்தில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்குத்தான் நாங்கள் முதலில் வாய்ப்பு கொடுக்க உள்ளோம். சொல்லப்போனால் அவருக்கு நாங்கள் இன்னும் தேவையான வாய்ப்புகளை கொடுத்து முடிக்கவில்லை. எனவே அவர் தான் இத்தொடரை துவங்குவார். ஏனெனில் தற்சமயம் அவர் பேட்டிங் செய்ய விதம் அபாரமாக இருப்பதுடன் ஏற்கனவே அவர் அணியில் இருக்கிறார்”

இதையும் படிங்க: அந்த டெஸ்ட்ல பாஸ் ஆகிட்டா சச்சின், விராட் கோலி வரிசையில் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் – சபா கரீம் பாராட்டு

“ஒருநாள் தொடரில் நியூசிலாந்து சுமாராக செயல்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் வலுவான அணி ஆகும். குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர்கள் நமக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார்கள். எனவே அவர்களை தோற்கடிக்க எங்களது சிறந்த செயல்பாடுகளை நாங்கள் வெளிப்படுத்துவோம். அவர்கள் இத்தொடருக்காக புத்துணர்ச்சியுடன் வருவார்கள் என்பதால் நாங்களும் தயாராக உள்ளோம்” என்று கூறினார். இதனால் இந்தியாவுக்காக களமிறங்கி விளையாடுவதற்கு பிரித்திவி ஷா இன்னும் சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement