- Advertisement -
ஐ.பி.எல்

ஹார்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பது சட்டமல்ல.. மும்பை அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை :

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை மாற்றி பாண்டியாவை கேப்டனாக கொண்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமின்றி அந்த அணியின் முன்னணி வீரர்களான சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோரது மத்தியிலும் கண்டனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பாண்டியா கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு சூரியகுமார் யாதவ் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நீடிப்பார் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் அணிகளின் ஒப்பந்தம் பிசிசிஐ முன்னிலையில் தான் கையெழுத்து இடப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தனிப்பட்ட வீரருக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்பதனால் பாண்டியா கேப்டனாக நீடிக்க வற்புறுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு அணியின் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ அதை செய்து கொள்ளலாம் என்பதனால் ஒருவேளை மும்பை அணியின் நிர்வாகம் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆவது வீரராக விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற இருக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அப்படி ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் ஏதாவது ஒரு அணி நிச்சயம் அவரை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் என்பது உறுதி.

- Advertisement -