அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததன் காரணமாக அடுத்த கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா செயல்பட்டிருந்த வேளையில் அவரே டி20 அணியின் நிரந்தர கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலேயே இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இப்படி பாண்டியா இருக்கும்போது சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த டி20 அணியின் கேப்டன் பதவிக்கு பாண்டியா தேர்வு செய்யப்படாததற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சூழல் தான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பாண்டியா தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது மிக மோசமான சூழலை சந்தித்து வருகிறார். பாண்டியா மற்றும் நட்டாஷாவின் விவாகரத்து ஏற்கனவே பிசிசிஐக்கு தெரிந்துள்ளதாலே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாமல் போயிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது கேப்டனாக செயல்பட்ட பாண்டியா அவரது தலைமையில் மும்பை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மத்தியில் பாண்டியா பெரும் அளவு விமர்சனத்தை சந்தித்தார். அதோடு மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தற்போது மோசமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு அந்த கொல்கத்தா வீரர் தேர்வானதுக்கு காரணமே கவுதம் கம்பீர் தானாம் – விவரம் இதோ
இந்த காரணத்தினால் அவரது மனநிலையை புரிந்து கொண்ட பிசிசிஐ-யும் கம்பீரும் சேர்ந்து சூரியகுமார் யாதவிற்கு கேப்டன் வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள். மேலும் தற்போது இருக்கும் சூழலில் பாண்டியா மீது அதிக சுமை கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாமல் போய் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



