இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் முதல் முறையாக களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இரண்டு அணிகளும் அண்மையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரவப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஏராளமான வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் புதிதாக சில வீரர்களுக்கும் கம்பீர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.
அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அசுத்தலாக செயல்பட்ட முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை கெளதம் கம்பீர் அணியில் இணைத்துள்ளார்.
இப்படி அவரை கம்பீர் அணிக்குள் கொண்டு வந்ததுதான் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஹர்ஷித் ராணா சிறப்பான பந்துவீச்சாளராக இருந்தால் கூட ஏற்கனவே இந்திய அணியின் வாய்ப்புக்காக பல்வேறு வீரர்கள் போட்டிக்கு காத்திருக்கும் வேளையில் புதிதாக அவரை அணியில் கொண்டு வந்தது கௌதம் கம்பீரின் அரசியல் தான் என்றும் நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹர்ஷித் ராணா திறமையான வீரராக இருந்தாலும் ஏற்கனவே காத்திருக்கும் வீரர்களை விடுத்து அவரை தேர்ந்தெடுத்தது தவறு என்றும் சிலர் இந்த தேர்வை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான தொடரில் அவங்க 3 பேருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் ஆதங்கம்
ஏற்கனவே பல்வேறு நிபந்தனைகளை பி.சி.சி.ஐ இடம் முன்வைத்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள கம்பீர் இப்படி இந்திய அணிக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



