ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் பிசிசிஐ மூலம் தனித்தனியே அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் வெளியான அணியில் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொடரில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஜிம்பாப்வே தொடரில் அசத்தலாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளனர். இதில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஜிம்பாப்வே தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியும் அவர்களுக்கு இடம் வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறாத வேலையில் இனிவரும் தொடர்களிலாவது தொடர்ந்து இடம் பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் கொடுக்கப்படாமல் டி20 போட்டிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படி சிறப்பான வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ள ரசிகர்கள் பலரும் எதிர்கால இந்திய அணியை உருவாக்கும் வகையில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : ஃபைனலில் அதைப் பற்றி தெரியாதப்போ.. விராட் கோலி கொடுத்த அட்வைஸ் வரலாறா மாறிடுச்சு.. அக்சர் படேல்
அதோடு திறமையை நினைக்காமல் சிறப்பாக விளையாடிய வீரர்களை கழட்டி விட்டு மீண்டும் பி.சி.சி.ஐ வித்தியாசமான அணியை தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



