அந்த பாசம் விட்டுப்போகுமா? கண்டிப்பா பாண்டியா அவருக்கு டெபியூ சான்ஸ் – கொடுப்பாரு பாருங்க

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் துவங்க உள்ளது. அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 3-ஆம் தேதி மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கான துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஹார்டிக் பாண்டியா ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்றவர்.

கடந்த ஆண்டே குஜராத் அணி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தினை வென்று அறிமுக தொடரிலேயே வெற்றியை கண்டு சாதனை படைத்தது. அந்த தொடரில் குஜராத் அணியை அற்புதமாக வழிநடத்திய ஹார்டிக் பாண்டியா அதன்பின்னரும் அற்புதமான செயல்பாடுகளை இந்திய அணிக்காக வழங்கி வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Shubman Gill 1

அதுமட்டுமின்றி இன்னும் 2 ஆண்டுகளில் அடுத்து வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே கேப்டனாக செயல்பட இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா அணிக்குள் தனக்கு பிடித்தமான வீரரான சுப்மன் கில்லை நிச்சயம் இன்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்துவார் என்றே தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரின்போது குஜராத் அணிக்காக துவக்க வீரராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சுப்மன் கில்லின் திறமை மீது எப்பொழுதுமே பாண்டியாவிற்கு ஒரு நல்ல நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று சுப்மன் கில்லை எப்போதும் பாராட்டி ஆதரித்து வரும் அவர் நிச்சயம் இந்த போட்டியிலும் அவருக்கான அறிமுக வாய்ப்பை கொடுத்து அவரை ஆதரிப்பார் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2022 சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்ந்த 5 வித்யாசமான வேடிக்கையான தருணங்கள் – வித்யாச பதிவு

இதன் காரணமாக கண்டிப்பாக இன்று சுப்மன் கில்லின் டி20 கிரிக்கெட் பயணம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement